ஞாயிறு, 16 டிசம்பர், 2018

விவேகானந்தரின் அறிவுரைகள் :13

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி ...
13.நியூட்டன் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தார் என்று சொல்லுகிறோம்.அது எங்காவது ஒரு மூலையில் அவர் வருவார் என்று உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்ததா? அது அவர் உள்ளத்திலேயே இருந்தது .சரியான நேரம் வரவே அதை அவர் கண்டுபிடித்தார்.காலமெல்லாம் உலகம் இது வரையிலும் பெற்று வந்திருக்கிற அறிவு முழுவதும் மனதிலிருந்துதான் வந்திருக்கிறது.பிரபஞ்சத்திலுள்ள அறிவு முழுவதும் நிரம்பிய மிகப் பெரிய நூல்நிலையம் உன்னுடைய உள்ளத்திலேயே அடங்கியிருக்கிறது.வெளி உலகம் வெறும் தூண்டுதலாக மட்டுமே அமைகிறது.அமைந்து உன்னுடைய உள்ளத்தை நீ ஆராய்வதற்குத் தேவையான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.அறிவுரைகள் தொடரும்...
       நன்றி.

சனி, 8 டிசம்பர், 2018

விவேகானந்தரின் அறிவுரைகள் :12

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி ...
12..நம்மைப் பற்றிபே முதலில் நினைத்துக் கொள்ளும் சுயநலம்தான் மிகப் பெரிய பாவமாகும்.நான் தான் முதலில் சாப்பிடுவேன் நான் தான் மற்றவர்களைவிட அதிக செல்வம் பெற்றவனாக இருப்பேன்.எல்லாவற்றையும் நானே வைத்திருக்க வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு முன்பு நானே தான் சொர்க்கம் போவேன்.மற்றவற்களுக்கு கிடைப்பதற்கு முன்பு நான் முக்தியை அடைவேன் என்றும் நினைப்பவன் தான் சுயநலவாதி ஆவான்.நான் தான் கடைசி ஆளாக  இருப்பேன் சொர்க்கத்திற்குப்  போவதைப் பற்றியும் நான் பொருட்படுத்தவில்லை நரகத்திற்கு செல்வதன் மூலமாக என்னுடைய சகோதர்களுக்கு என்னால் உதவி செய்ய முடியுமானால் நரகத்திற்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று சுயநலம் இல்லாதவன் சொல்கிறான்.
இத்தகைய தன்னலமற்ற மனப்பான்மை தான் ஆன்மீக வாழ்க்கை இருப்பதற்கும் இல்லாதிருப்பதற்கும் உரிய சோதனையாகும்.இவ்விதச்  சுயநலமற்ற தன்மையைப் பெருமளவிற்கு ஆன்மீக வாழ்க்கையைப் பெற்றவனாகிறான்.அவனே மற்றவர்களைக் காட்டிலும் சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான்.அறிவுரைகள் தொடரும்...
                   நன்றி.


வியாழன், 6 டிசம்பர், 2018

விவேகானந்தரின் அறிவுரைகள்:11

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி...
11.ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாடும் பெருமை அடைவதற்கு மூன்று விஷயங்கள் அவசியம்.
1.நன்மை தரக்கூடிய சக்திகளில் உறுதியான நம்பிக்கை.
2.பொறாமையும் சந்தேகமும் இல்லாமலிருத்தல்.
3.நல்லவர்களாக இருக்கவும் நன்மையைச் செய்யவும் முயற்சி செய்யும் அனைவருக்கும் உதவி புரிதல்.அறிவுரைகள் தொடரும்...
     நன்றி.

செவ்வாய், 4 டிசம்பர், 2018

விவேகானந்தரின் அறிவுரைகள்:10

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி...
10 .உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்து வருந்தாதே எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது.உன்னுடைய ஒவ்வொரு சொல்லும் சிந்தனையையும் செயலும்,அதற்கு ஏற்ற பலனைத்தரும் வகையில் உன் மனதில் இடம்பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில் வைக்கவேண்டும்.உனது தீயஎண்ணங்களும் செயல்களும் புலிகளைப் போல் உன் மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன.அதைப் போலவே உனது நல்ல எண்ணங்களும் செயல்களும் ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உண்மை எப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக இருக்கின்றன என்னும் ஊக்கம் தரும் நம்பிக்கையும் இருக்கிறது.இதை நீ எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.அறிவுரைகள் தொடரும்...
       

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

விவேகானந்தரின் அறிவுரைகள்:9

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி...
9.மனிதனுக்கு மன அமைதியைத்தருவது தான் மதத்தின் அடிப்படை இலச்சியமாகும்.மறு உலகத்தில் இன்பம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த உலக வாழ்க்கையில் துன்பத்தை அனுவிப்பது அறிவுடைய செயலாகாது.
ஒருவன் இங்கேயே இப்போதே ,இன்பத்தைப் பெற வேண்டும்.இப்படிப்பட்டஇன்பத்தைத் தரக்கூடிய மதம் எதுவாக இருந்தாலும் அந்த மதம்தான் சமுதாயத்திற்கு ஏற்ற உண்மையான மதமாகும்.அறிவுரைகள் தொடரும்...
      நன்றி.

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...