ஜோதிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோதிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஜூலை, 2024

நட்சத்திர பறவை

 நட்சத்திரங்களும் பறவைகளும்

1. அஸ்வினி - இராஜாளி

2. பரணி - காகம்

3. கார்த்திகை - மயில்

4. ரோகிணி - ஆந்தை

5. மிருகசீரிடம் - கோழி

6. திருவாதிரை - சிட்டுக் குருவி

7. புனர்பூசம் - அன்னம்

8.பூசம் - நீர்க்காகம்

9. ஆயில்யம் - சிச்சிலி

10.மகம் - ஆண்கழுகு

11. பூரம் - பெண் கழுகு

12. உத்திரம் - கிளுவை

13. அஸ்தம் - பருந்து

14. சித்திரை - மரங்கொத்தி

15. சுவாதி - தேனீ

16. விசாகம் - கிளி

17. அனுஷம் - வானம்பாடி

18. கேட்டை - சக்கரவாகம்

19. மூலம் - செம்போத்து

20. பூராடம் - கவுதாரி

21. உத்திராடம் - வலியன்

22. திருவோணம் - நாரை

23. அவிட்டம் -வண்டு

24.சதயம் - அண்டங் காகம்

25.பூரட்டாதி - உள்ளான்

26. உத்திரட்டாதி - கோட்டான்

27. ரேவதி - வல்லூறு


வெள்ளி, 19 ஜூலை, 2024

சுவைகளில் ஆருடம்

 சுவைகளில் ஆருடம் .ஒரு காரியத்தை செய்து விட்டு ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும்பொழுது சுவையாகவும், மனதிற்கு நிறைவாகவும் இருந்தால் அந்த காரியம் வெற்றியடையும் அவ்வாறு இல்லாமல் நாம் விரும்பியபடி உணவு சுவை இல்லாமல் இருந்தால் அந்த காரியம் நடைபெற தாமதமாகும், பெரிய லாபமும் இருக்காது. இதை எவ்வாறு சோதனை செய்வது தேர்வு எழுதிவிட்டு உணவகத்தில் ஏதேனும் ஒரு சிற்றுண்டி வாங்கிச்சாப்பிட வேண்டும். அந்த உணவு அவன் விரும்பியபடியும், திருப்தியாகவும் இருந்தால் பரிட்சை முடிவு சாதகமாய் இருக்கும். அவ்விதம் அந்த உணவு காரமாகவும், சுவை அற்றதாகவும் இருந்தால் நிச்சயமாக பரிட்சை முடிவு சாதகமற்றதாக இருக்கும். கசப்பாக ஏதாவது சாப்பிட நேரிடில் அன்று பண செலவு ஏற்படும் என்று அர்த்தம். அதிக இனிப்பான உணவு எதார்த்தமாக சாப்பிட நேர்ந்தால் தான் விரும்பிய நபரிடம் அதிகமாக பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த நபரினால் இவருக்கு ஆதாயம் ஏற்படும். உப்பு அதிகமான உணவு சாப்பிட நேர்ந்தால் உறவினரிடம் பகை ஏற்படும். சற்று புளிப்பு சுவை உள்ள ஆரஞ்சு பழச்சாறு எதிர்பாராதவகையில் கிடைத்தால் விரைவில் அவருடை கடன் அடைப்பதற்கான ஏதாவது வழி ஏற்படும். நன்றாக பழுத்த மாம்பழம் சுவையுடன் கிடைத்தால் தனது உறவினருக்கு மகன் அல்லது மகள் பிறக்கும் நல்ல செய்தி கிடைக்கும். யாராவது நமக்கு பழம் வாங்கிக் கொடுத்தால் அந்த பழம் நாம் சாப்பிடும்பொழுது அழுகிய நிலையில் இருந்தால் பெரிய நஷ்டம் தொழிலில் ஏற்படும் என்று அர்த்தம்.

சனி, 24 பிப்ரவரி, 2024

மயில் பஞ்சப்பட்சியின் நட்பு, பகை பஞ்சப்பட்சிகள்

 மயில் பஞ்சப் பட்சியின் நட்பு, பகை பஞ்சப் பட்சிகள்.

     திருவோணம் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இந்த 6 நட்சத்திரங்களில் வளர்பிறை காலங்களில் அதாவது அமாவாசை திதிக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் இருந்து பெளர்ணமி திதி வரை பிறந்தவர்களின் நட்சத்திரப் பஞ்சப்பட்சி மயில்.

    மயில் பஞ்ச பட்சிக்கு வளர்பிறை காலத்தில் நட்பு பஞ்ச பட்சி வல்லூறு, கோழி.

பகை பஞ்ச பட்சி ஆந்தை, காகம்.

அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் இந்த 5 நட்சத்திரங்களில் தேய்பிறை காலங்களில் அதாவது பெளர்ணமி திதிக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் இருந்து அமாவாசை திதி வரை பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சி மயில்

    மயில் பஞ்சப்பட்சிக்கு தேய்பிறை காலங்களில் நட்பு பஞ்சப் பட்சி வல்லூறு, கோழி

பகை பஞ்சப் பட்சி ஆந்தை, காகம்

கோழி பஞ்சப் பட்சியின் நட்பு, பகை பஞ்சப்பட்சிகள்.

 

கோழி பஞ்சப்பட்சியின் நட்பு, பகை பஞ்சப்பட்சிகள்
     அனுஷம், கேட்டை, மூலம் பூராடம், உத்திராடம் இந்த 5 நட்சத்திரங்களில் வளர்பிறை காலங்களில் அதாவது அமாவாசை திதிக்கு அடுத்த நாளான பிரதமை திதி வரை பிறந்தவர்களின் நட்சத்திரப்பஞ்ச பட்சி கோழி.
வளர்பிறை காலத்தில் கோழி பஞ்சப்பட்சிக்கு நட்பான பஞ்சப்பட்சி மயில், காகம்.
கோழி பஞ்ச பட்சிக்கு பகையான பஞ்சப்பட்சி வல்லூறு, ஆந்தை.
      திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் இந்த 6 நட்சத்திரங்களில் தேய்பிறை காலங்களில் அதாவது பௌர்ணமி திதிக்கு அடுத்த திதியான பிரதமை திதியில் இருந்து அமாவாசை திதி வரை பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சி கோழி.
  தேய்பிறை காலத்தில் கோழி பஞ்சப்பட்சிக்கு நட்பு பஞ்சப்பட்சி மயில், ஆந்தை.
பகை பஞ்சப்பட்சி காகம், வல்லூறு .

காகம் பஞ்சப்பட்சியின் நட்பு, பகை பஞ்சப்பட்சிகள்

 காகம் பஞ்சப்பட்சியின் நட்பு, பகை பஞ்சப் பட்சிகள்

 உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் இந்த 5 நட்சத்திரங்களில் வளர்பிறை காலங்களில் அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் இருந்து பெளர்ணமி திதி வரையில் பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சி காகம் பஞ்சபட்சியாகும்.

     இந்த காகம் பஞ்ச பட்சிக்கு நட்பான பஞ்ச பட்சி ஆந்தை, கோழி.

காகம் பஞ்ச பட்சிக்கு பகை பஞ்ச பட்சி வல்லூறு, மயில்.

   உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் இந்த 5 நட்சத்திரங்களில் அதாவது பெளர்ணமி திதிக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் இருந்து அமாவாசை திதி வரை பிறந்தவர்களின் நட்சத்திரப் பஞ்ச பட்சி காகம்.

 தேய்பிறை காலத்தில் காகம் பஞ்சப்பட்சியில் பிறந்தவர்களின் நட்பு பஞ்சப்பட்சி ஆந்தை, வல்லூறு .

பகை பஞ்சப்பட்சி மயில், கோழி.


ஆந்தை பஞ்சபட்சியின் நட்பு ,பகை பஞ்சப் பட்சிகள்

 ஆந்தை பஞ்சபட்சியின் நட்பு பகை பஞ்சபட்சிகள்

திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் இந்த 6 நட்சத்திரங்களில் வளர்பிறை காலங்களில் அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் இருந்து பெளர்ணமி திதி வரையில் பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சி ஆந்தை பஞ்ச பட்சியாகும்.

இந்த ஆந்தை பஞ்ச பட்சிக்குக்கு நட்பான பஞ்ச பட்சி வல்லூறு, காகம்.

இந்த ஆந்தை பஞ்ச பட்சிக்கு பகையான பஞ்ச பட்சி மயில், கோழி.

அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் இந்த 5 நட்சத்திரங்களில் தேய்பிறை காலங்களில் அதாவது பெளர்ணமி திதிக்கு பிறகு வரும் பிரதமை திதியில் இருந்து அமாவாசை திதி வரை பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சியும் ஆந்தை தான

தேய்பிறை காலத்தில் ஆந்தை பஞ்சபட்சியில் பிறந்தவர்களின் நட்பு பஞ்சப்பட்சி கோழி, காகம்

பகை பஞ்சப்பட்சி வல்லூறு, மயில்.

திங்கள், 29 ஜனவரி, 2024

வல்லூறு - நட்பு, பகை பஞ்சப் பட்சி

 வல்லூறு பஞ்சப் பட்சியின் நட்பு, பகை பஞ்சப் பட்சிகள்

அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகினி, மிருகசீரிடம் இந்த 5 நட்சத்திரங்களில் வளர்பிறை காலங்களில் அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் இருந்து பெளர்ணமி திதி வரையில் பிறந்தவர்களின் நட்சத்திரப் பட் சி வல்லூறு பஞ்சப் பட்சியாகும். இந்த வல்லூறு பஞ்சப் பட்சிக்கு நட்பான பஞ்சப் பட்சி மயில் மற்றும் ஆந்தை

   இந்த வல்லூறு பஞ்சப் பட்சி க்கு பகை யான பஞ்ச பட்சி

காகம் மற்றும் கோழி

திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

இந்த 6 நட்சத்திரங்களில் தேய்பிறை திதியில் அதாவது  பௌர்ணமி திதி க்கு பிறகு வரும் பிரதமை திதியில் இருந்து அமாவாசை திதி வரை பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சியும் வல்லூறு தான்

தேய்பிறை காலத்தில் வல்லூறு பட்சியில் பிறந்தவர்களின் நட்பு பஞ்சப்பட்சி

மயில், காகம்

பகை பஞ்சப்பட்சி ஆந்தை, கோழி.

வியாழன், 25 ஜனவரி, 2024

தேய்பிறை நட்சத்திரப்பட்சி 56 556

 

தேய்பிறை நட்சத்திரப் பட்சி - 56 556
தேய்பிறை நட்சத்திரப்பட்சி (பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரை பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சி)
அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் இந்த 5 நட்சத்திரங்களில் தேய்பிறையில் பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சி -மயில்
திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம்,பூரம் இந்த 6 நட்சத்திரங்களில் தேய்பிறையில்  பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சி - கோழி
உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் இந்த 5 நட்சத்திரங்களில் தேய்பிறையில்  பிறந்தவர்களின் நட்சத்திரப் பட்சி - காகம்
அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்
இந்த 5 நட்சத்திரங்களில் பிறந்தவர்களில் தேய்பிறையில் பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சி - ஆந்தை
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இந்த 6 நட்சத்திரத்திரங்களில் தேய்பிறையில் பிறந்தவர்களின் நட்சத்திரப்பட் சி - வல்லூறு

வளர்பிறை நட்சத்திரப்பட்சி - 56556

 வளர்பிறை நட்சத்திரப் பட்சி (பிரதமை திதியில் இருந்து பெளர்ணமி திதி வரை பிறந்தவர்களின் நட்சத்திர பட்சி)

நட்சத்திரங்கள் மொத்தம் 27. இந்த 27 நட்சத்திரத்தில் அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் இந்த 5 நட்சத்திரங்கள் வல்லூறு என்னும் பட்சி வகையைச் சார்ந்தது.

திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் இந்த 6 நட்சத்திரங்கள் ஆந்தை என்னும் பட்சி வகையைச் சார்ந்தது.

உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் இந்த 5 நட்சத்திரங்கள் காகம் என்னும் பட்சி வகையைச் சார்ந்தது.

அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் இந்த 5 நட்சத்திரங்கள் கோழி என்னும் பட்சி வகையைச் சார்ந்தது.

திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இந்த 6 நட்சத்திரங்கள் மயில் என்னும் பட்சி வகையைச் சார்ந்தது.

வளர்பிறையில் வரும் நட்சத்திரங்களின் நட்சத்திர பட்சிகளை ஞாபகம் வைத்துக் கொள்ள இந்த 56 556 என்ற எண்களை பயன்படுத்தலாம்.


வியாழன், 31 ஆகஸ்ட், 2023

விநாயகரும் மலர் வழிபாடும்


விநாயகர் சதுர்த்தி அன்று வழிபட வேண்டிய மலர்களும் அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகளும்1. மல்லிகை, முல்லை - தீயவை நீங்கும் 2. ரோஜா - எண்ணங்கள் ஈடேறும் 3. பட்டு ரோஜா - இறையருள் பெறலாம் 4. அரளிப்பூ - மனநிம்மதி கிடைக்கும் 5. தாமரைப்பூ - செல்வ வளம் பெருகும் 6. வெள்ளைத் தாமரை - சகல சக்தி கிடைக்கும். 7. வில்வப்பூ - அரச பதவி பெறலாம் 8. சங்குப் பூ - பெருஞ்செல்வம் கிட்டும் 9. ஜாதிப்பூ - வைகுண்ட பதவி கிட்டும் 10. அல்லிப் பூ - வளம் தரும் 11. விருட்சப் பூ - நோய்கள் நீங்கும் 12. எருக்கம் பூ - மன தைரியம் பெறலாம் 13. மகிழம்பூ - பொறுமை தரும் 14. செவ்வந்திப் பூ - ஆன்மீக உயர்வு பெறலாம் 15. பவளமல்லிகை - நல்ல எண்ணம் வளரும்


புதன், 4 ஜூலை, 2018

காதல் நட்சத்திரங்கள்

வணக்கம்
               காதல் நட்சத்திரங்கள்
1. அவிட்டம் -பூ ர ட்டா தி
பெண் சிங்கம் -ஆண் சிங்கம்
2.ரேவதி -பரணி
பெண் யாணை -ஆண் யானை
3கார்த்திகை -பூசம்
பெண் ஆ டு -ஆண் ஆ டு
4மி ருகசீரிடம் -ரோகினி
பெண் சாரை -நாகம்
5.திருவோணம் -பூராடம்
பெண் குரங்கு -ஆண் குரங்கு
6.புனர்பூசம் -ஆயில்யம்
பெண் பூனை -ஆண் பூனை
7.பூரம் -மகம்
பெண் எலி -ஆண் எலி
8.விசாகம் -சித்திரை
பெண் புலி -ஆண் புலி
9.அஸ்தம் -சுவாதி
பெண்  எருமை -ஆண் எருமை
10.உத்திரட்டாதி -உத்திரம்
பசு -எருது
11.அனுஷம் -கேட்டை
பெண்  மான் -ஆண்  மான்
12.மூலம் -திருவாதிரை
 பெண் நாய்-ஆண் நாய்
13.சதயம் -அஸ்வினி
பெண் குதிரை -ஆண் குதிரை
14.உத்திராடம்-அபிஜித்
பெண் கீறி-ஆண் கீறி
         
             

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...