புதன், 30 அக்டோபர், 2019

மகிழம்பூ முறுக்கு

மகிழம்பூ முறுக்கு
தேவையான பொருட்கள்
பச்சரிசிமாவு-3கப்
பொரிகடலைமாவு-1-1/2கப்
கடலைமாவு-3டேபிள் ஸ்பூன்
வெண்ணெய்-3டேபிள் ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
சீரகம்-1டேபிள் ஸ்பூன்
எண்ணெய்-பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
பச்சரிசி மாவு,பொரிகடலைமாவு,கடலைமாவு,உப்பு,சீரகம்,வெண்ணெய் மற்றும்சூடான எண்ணெய்2ஸ்பூன் அளவு விட்டு எல்லாவற்றையும் நன்றாக பிசைந்துபின்பு மகிழம்பூ முறுக்கு அச்சில் மாவை வைக்கவும். அடுப்பை பற்றவைத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு மிதமான சூட்டில் வைத்து அச்சில் வைத்த மாவை பிழிந்து எடுக்கவும்.சுவையான மொறு மொறுப்பான மகிழம்பூ முறுக்கு தயார்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

கர்மா.

முக்திக்கு விரோதியான கர்மத்தைச் செய்துகொண்டு முக்தியை அடைய முயல்வது வீண் முயற்சியே ஆகும்.மருந்தை உட்கொள்கிற அதே சமயத்தில் பத்தியம் செய்யாமல் இருந்தால் நோய் குணமாகாது.அது போலக் கர்மத்தைச் செய்து கொண்டே முக்தி பெற முயற்சிப்பதும் பலனளிக்காது என்பது தான் பி்ரச்சனை.உணவு எதுவும் இல்லாமல் உயிர் வாழ முடியாதாகையால் நாம் பிழைத்திருப்பதற்காக எதையாவது உண்டு தான் ஆகவேண்டும்.தவறான உணவை உட்கொண்டுவிட்டால் உடல் ஆரோக்கியம்கெட்டுப் போய்விடும் என்ற பயத்தால் உணவே வேண்டாம் என்று விட்டுவிட்டால் உடலே நசித்துப் போய்விடும்.எனவே புஷ்டியை தரக்கூடிய நல்ல உணவையே சாப்பிடவேண்டும்.அதைப்போல கர்மங்களால் சம்சாரப்பிணைப்பு இறுகும் என்ற பயத்தால் கர்மங்களையே விட்டுவிடக்கூடாது.கெட்ட காரியங்களால் மட்டுமே இந்த பந்தம்  ஏற்படும்.நல்லெண்ணத்துடன் நல்ல கர்மங்களைச் செய்வதினால் எந்த தீங்கும் ஏற்படாது.அத்தகைய கர்மம் முக்திக்கு தடையாகவோ எதிரியாகவோ இருக்காது.நல்ல கர்மங்களை மட்டும் செய்வதினால் ஆத்மா பலம் அடைகிறது.கர்மங்களில்  பந்தத்தை ஏற்படுத்துபவை எவை என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ளவேண்டும். கர்மம், விகர்மம் இவைகளை பிரித்தறிந்து எந்த கர்மம் நம்மை சம்சாரத்தில் அழுத்தாமல் பரமாத்மாவின்பால் கொண்டு செல்கிறதோ அத்தகைய நற்கருமங்களை அறிந்து கொண்டு அவைகளை செய்வதினால் வாழ்க்கையில் உண்மையான லாபத்தைப் பெறலாம்.
          நன்றி.

புதன், 21 ஆகஸ்ட், 2019

கலியுகவரதர் ஶ்ரீகிருஷ்ணர்.


நல்ல செயலை செய்பவனுக்கு அதை செய்து முடிக்கவில்லை என்றாலும் அதனால் தீங்கு ஒன்றும் கண்டிப்பாக ஏற்படாது.இது பகவான் அளித்துள்ள வாக்குறுதி.இப்பிறவியில் நம் சாதனை முற்றுப்பெறாவிட்டால் அடுத்த பிறவியில் அதற்கு வேண்டிய வாய்ப்பை பகவான் நமக்கு ஏற்படுத்தித்தருவார்.தியானத்திற்கு பக்தியின் பின்பலம் அவசியம்.பக்தியில் இரண்டு அம்சங்கள் அடங்கியுள்ளன. ஒன்று ஞானம் மற்றொன்று அன்பு.ஒருவனுடைய குணநலன்களின் பெருமையை அறிந்து கொள்ளாமல் அவனிடம் அன்பு செலுத்தினால் அது பாசமாகும். குழந்தைகளிடமும்,குடும்பத்தாரிடமும் அன்பை செலுத்தும் போது அதில் இந்த பாசம் தான் நிறைந்திருக்கும்.ஆனால் இந்த கலியுகத்தில் குணத்தைப் பார்க்காமல் அவர்களிடம் உள்ள பணத்தின் மதிப்பை பார்த்துத்தான் பாசம் வருகிறது. அதே போல பகவான் மகிமையை அறியாமல் அவனிடம் செலுத்துகிற அன்பு குருட்டு பக்தியாகும்.அவனது மகிமையை அறிய அறிய புனிதமான பக்தி மனதில் பெருகும்.கிரகங்கள்,நட்சத்திரங்களுகிடையேயுள்ள உறவு,நாம் சுவாசிக்கும் முறை இவ்வாறு நூற்றுக்கணக்கான இயற்கையின் இயக்கங்களையும்,அமைப்புக்களையும் பார்க்கும் போது ஒரு நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகத்தான் இந்த உலகம் நமக்குப் புலப்படுகிறது.இவை அனைத்தும் கலியுகவரதர் ஶ்ரீ கிருஷ்ணரின் லீலைகளே!


x

கிருஷ்ண பகவான்


ஶ்ரீ கிருஷ்ணர் தனது பக்தர்களை காப்பதர்காகவும்,துஷ்டர்களை அழிப்பதர்காகவும் கி.மு.3228 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதியில்  நள்ளிரவில் மதுராவில் உள்ள சிறைச்சாலையில் கிருஷ்ணர் குழந்தையாக அவதரித்தார்.அன்றிறவே கோகுலம் சென்றடைந்தார்.கிருஷ்ணர் அவதரித்த இடம் கிருஷ்ண ஜென்மஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.3வருடம் 4மாதங்கள் வரை கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ண பகவான்,பிருந்தாவனம் சென்றார்.6வயதைகடந்த பிறகு நந்தகிராமத்தில் வளர்ந்தார்.கிருஷ்ணபகவான் தனது தாய் மாமன் கம்சனின் அழைப்பின் பெயரில் மதுரா சென்றார்.மதுரா சென்ற தினத்தில இருந்து பதினான்காவது தினத்தில் கம்சனை கொன்றார்.18 வயது வரை மதுராவில் வசித்த கிருஷ்ணர் ,28 வயதில் துவாரகை கோட்டையை நிறுவி அங்கு வசிக்கத் தொடங்கினார்.கி.மு.3138 ஆம் ஆண்டு தனது 90 வது வபதில் பகவத் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்தார்.96 வருடங்கள் 8 மாதங்கள் துவாரகையில் வசித்த பின் கி.மு.3102 தனது 125 வயதில் பங்குனி மாதத்தின் அமாவசை அன்று இவ்வுலகிலிருந்து புறப்பட்டு மீண்டும் ஆன்மீக உலகத்திற்குச் சென்றார்.

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...