புதன், 26 ஜூலை, 2023

ஆடி பதினெட்டாம் பெருக்கு

ஆடி பதினெட்டாம் பெருக்கு ஆடிமாதம் 18 ஆம் நாள் (3 - 08 - 2023) வியாழக்கிழமை அன்று அம்மன் கோயில்களிலும், திருச்சி காவேரி கரைகளிலும், மற்ற நீர்நிறைந்த இடங்களிலும், கிராமங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.பாண்டவர்கள் போர் முடிந்தபின்பு தாங்கள் பயன்படுத்திய ஆயுதங்களை சுத்தம் செய்து  ஆற்றங்கரையில் போரில் இறந்த முன்னோர்களுக்கு ஆடி 18 ஆம் பெருக்கு அன்று திதி கொடுத்த தினம்.

சப்தகன்னியரை வழிபடுவதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேரும் என்பது நம்பிக்கை. ஆடி பதினெட்டாம் நாள் அன்று மக்கள் நீர் நிரம்பிய இடங்களான ஆறு, குளம், கடல் போன்ற இடங்களில் நீராடி இறைவனை வழிபடுவது வழக்கம். புதிதாக திருமணமான பெண்கள் தங்கள் தாலி சரடை மாற்றிக்கொள்ளும் நாள்.

வெள்ளி, 21 ஜூலை, 2023

தர்மகர்மாதிபதியோகம்

 மேடை பேச்சாளர், கல்லூரி பேராசிரியர், வக்கீல், ஜோதிடர் இவர்களின் ஜாதகங்களில் தர்மகர்மாதிபதியோகம் கண்டிப்பாக இருக்கும். உதாரணம் 1

விருச்சிக லக்னத்திற்கு 2 ஆம் அதிபதி குருபகவான் (தனுசு)- தனுசு இராசியை 1 ஆம் வீடாக எண்ணி அதில் இருந்து 9 ஆம் வீடான சிம்ம இராசி, 10 ஆம் வீடான கன்னி இராசி. இதன் அதிபதிகள் சூரியன் மற்றும் புதன் இருவரும் இணைந்து கன்னி இராகியில் இருந்தால் இவர்கள் பிரபலமான மேடை.பேச்சாளர், வக்கீல், ஜோதிடர், கல்லூரி பேராசிரியராக தொழில் செய்வார்கள்.

உதாரணம் 2

கும்ப  லக்னமாஇருந்து அந்த கும்ப லக்னத்திற்கு 2 ஆம் அதிபதி மீனம்  இராசி அதன் அதிபதி (குரு). மீனம் இராசியை 1 ஆம் வீடாக எடுத்து அந்த இராகயில் இருந்து 9, 10 ஆம் இராசி வீடான துலாம், விருச்சிகம் இதன் அதிபதிகள் சுக்கிரன்,செவ்வாய், இணைந்து விருச்சிக இராசியில் இருந்து குருவின் பார்வை சுக்கிரன், செவ்வாய்க்கு கிடைத்தால் அவர்கள் ஜோதிடர், வக்கில் தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். குருவின் பார்வை  கிடைத்தால் வாக்கு தொழில் சிறப்பாக இருக்கும்




புதன், 19 ஜூலை, 2023

நற்பலன் தரும் ருது நட்சத்திரங்கள்

 ருது அமிர்த நட்சத்திரங்கள்

பெண் ருது யோகங்கள்
பருவ வயதுவந்தவுடன் ஏற்படும் மாற்றமே ருது எனப்படும். பெண்கள் ருதுவாகும் காலம் இரவு 6 மணிக்கு மேல் அதிகாலை 6 மணிக்குள் மட்டுமே ஏற்படும்.(சூரிய உதயத்ததில் இருந்து சூரியன் மறையும்வரை பெண்களுக்கு ருது ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது) அதனால்தான் பெண்களை நிலவுக்கு ஒப்பாக கூறுகிறோம்.பெண் ருதுவாகும் கிழமை ஞாயிற்றுக்கிழமையும் அஸ்தம் நட்சத்திரமாகவும் இருந்தால் சிறப்பு.
திங்கட்கிழமையும் மிருகசீரிடம் நட்சத்திரமாகவும் இருந்தால் சிறப்பு.
செவ்வாய்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமாகவும் இருந்தால் சிறப்பு.
புதன்கிழமையும் அனுஷம் நட்சத்திரமாகவும் இருந்தால் சிறப்பு.
வியாழக்கிழமையும் பூசம் நட்சத்திரமாகவும் இருந்தால் சிறப்பு.
வெள்ளிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமாகவும் இருந்தால் சிறப்பு.
சனிக்கிழமையும் ரோகிணி நட்சத்திரமாகவும் இருந்தால் சிறப்பு.

செவ்வாய், 18 ஜூலை, 2023

தினசரி நல்ல நேரம்

 

ஞாயிற்றுக்கிழமை - காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை.
திங்கட்கிழமை - காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை.
செவ்வாய்கிழமை - காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை.
புதன்கிழமை - காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை.
வியாழக்கிழமை - காலை 10.30 மணி முதல் 12.00 மணிவரை.
வெள்ளிக்கிழமை - காலை 9.00 மணி முதல் 10.30 மணிவரை
சனிக்கிழமை - காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை.
மேலே கண்டதினசரி நல்ல நேரங்களில் திருமணத்திற்கு ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளிகிழமை நேரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். வாரநாட்களில் வெள்ளிக்கிழமை பெண்கள் எண்ணெய் தேய்த்துக்குளிப்பதற்கும், சனிக்கிழமை ஆண்கள் எண்ணெய் தேய்த்துக்குளிப்பதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...