ருது அமிர்த நட்சத்திரங்கள்
பெண் ருது யோகங்கள்
பருவ வயதுவந்தவுடன் ஏற்படும் மாற்றமே ருது எனப்படும். பெண்கள் ருதுவாகும் காலம் இரவு 6 மணிக்கு மேல் அதிகாலை 6 மணிக்குள் மட்டுமே ஏற்படும்.(சூரிய உதயத்ததில் இருந்து சூரியன் மறையும்வரை பெண்களுக்கு ருது ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது) அதனால்தான் பெண்களை நிலவுக்கு ஒப்பாக கூறுகிறோம்.பெண் ருதுவாகும் கிழமை ஞாயிற்றுக்கிழமையும் அஸ்தம் நட்சத்திரமாகவும் இருந்தால் சிறப்பு.
திங்கட்கிழமையும் மிருகசீரிடம் நட்சத்திரமாகவும் இருந்தால் சிறப்பு.
செவ்வாய்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமாகவும் இருந்தால் சிறப்பு.
புதன்கிழமையும் அனுஷம் நட்சத்திரமாகவும் இருந்தால் சிறப்பு.
வியாழக்கிழமையும் பூசம் நட்சத்திரமாகவும் இருந்தால் சிறப்பு.
வெள்ளிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமாகவும் இருந்தால் சிறப்பு.
சனிக்கிழமையும் ரோகிணி நட்சத்திரமாகவும் இருந்தால் சிறப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக