மேடை பேச்சாளர், கல்லூரி பேராசிரியர், வக்கீல், ஜோதிடர் இவர்களின் ஜாதகங்களில் தர்மகர்மாதிபதியோகம் கண்டிப்பாக இருக்கும். உதாரணம் 1
விருச்சிக லக்னத்திற்கு 2 ஆம் அதிபதி குருபகவான் (தனுசு)- தனுசு இராசியை 1 ஆம் வீடாக எண்ணி அதில் இருந்து 9 ஆம் வீடான சிம்ம இராசி, 10 ஆம் வீடான கன்னி இராசி. இதன் அதிபதிகள் சூரியன் மற்றும் புதன் இருவரும் இணைந்து கன்னி இராகியில் இருந்தால் இவர்கள் பிரபலமான மேடை.பேச்சாளர், வக்கீல், ஜோதிடர், கல்லூரி பேராசிரியராக தொழில் செய்வார்கள்.
உதாரணம் 2
கும்ப லக்னமாஇருந்து அந்த கும்ப லக்னத்திற்கு 2 ஆம் அதிபதி மீனம் இராசி அதன் அதிபதி (குரு). மீனம் இராசியை 1 ஆம் வீடாக எடுத்து அந்த இராகயில் இருந்து 9, 10 ஆம் இராசி வீடான துலாம், விருச்சிகம் இதன் அதிபதிகள் சுக்கிரன்,செவ்வாய், இணைந்து விருச்சிக இராசியில் இருந்து குருவின் பார்வை சுக்கிரன், செவ்வாய்க்கு கிடைத்தால் அவர்கள் ஜோதிடர், வக்கில் தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். குருவின் பார்வை கிடைத்தால் வாக்கு தொழில் சிறப்பாக இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக