திங்கள், 26 நவம்பர், 2018

விவேகானந்தரின் அறிவுரைகள் :6

வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி...
6. ஒவ்வொருவனும் தன்னுடைய வழிதான் சிறந்தது என்று நினைக்கிறான்.மிகவும் நல்லது .ஆனால் உனக்கு வேண்டுமானால் அது நல்லதாக இருக்கலாம் என்பதை நீ நினைவில் வைக்க வேண்டும்.ஒருவனால் சிறிதுகூட ஜீரணிக்க முடியாத ஓர்உணவு ,மற்றொருவனுக்கு எளிதில் ஜீரணமாக்கக் கூடியதாக இருக்கும்.உனக்கு பொருத்தமாக இருப்பதனாலேயே ஒவ்வொருவனுக்கும் அது தான் வழி,சங்கரனுக்குப் பொருத்தமான சட்டை சந்திரனுக்கும் ,சங்கரிக்கும் பொருத்தமாக இருக்கவேண்டும் என்று முடிவிற்கு தாவிவிடாதே.கல்வி அறிவு இல்லாத,பண்பாடற்ற ,சிந்தனையில்லாத ஆண் பெண் அனைவரும் இத்தகைய குறுகலான கட்டுக்குள் புகுத்தப்பட்டிருக் கிறார்கள்.நீயாகவே சந்தித்துப்பார்.நாத்திகனாக இருந்துவிட்டுப் போ!
இந்த  உலகமே பெரிது என்று நினைக்கும் இலெகிகனாக இருந்துவிட்டுப் போ!
அது கூட எவ்வளவோ பரவாயில்லை மனதைப் பயன்படுத்தி சிந்தித்துப் பார்க்கவேண்டும்.இந்த மனிதனுடைய வழி தவறானது என்று சொல்வதற்கு
உனக்கு என்ன உரிமை இருக்கிறது?உமக்கு வேண்டுமானால் அது தவறாக இருக்கலாம்.அதாவது நீ அந்த வழியைப் பின்பற்றினால் அதனால் உனக்கு கேடு விளையக்கூடும்.ஆனால் அதற்காக அந்த வழியால் அவன் கீழ்நிலையை அடைந்து விடுவான் என்பது அதன் பொருளல்ல.
           எனவே உன்னிடம் அறிவு இருந்து மற்றொருவன்பலகீனமாக இருப்பதை நீ பார்த்தால் ,அதற்காக அவனை நீ கண்டிக்காதே.உனக்கு இபலுமானால் அவனுடைய நிலைக்கு இறங்கிச் சென்று அவனுக்கு நீ உதவி செய்.தானாகவே அவன் வளர்ச்சி பெற வேண்டும்.நான் அவனுடைய தலைக்குள் ஐந்து மணி நேரத்தில் ஐந்து கூடை அறிவைத்திணித்துவிடுவேன்.ஆனால், அதனால் என்ன நன்மை நடந்துவிடப்போகிறது?அவன் முன்பு இருந்ததைவிட மேலும் சற்று அதிகம் மோசமானவனாகத்தான் இருப்பான்.அறிவுரைகள் தொடரும்...
          நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...