வியாழன், 14 மார்ச், 2019

பகவான் பாபாவின் நற்பண்புகள்

1.பகவான் பாபா விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவர்.
2.தனக்கு எது கிடைத்தாலும் அதை திருப்தியாக ஏற்பவர்.
3.மற்றவர்களைப் பற்றி அவதூராக பேசவோ,அவர்களைப் பற்றி புகார் செய்யமாட்டார்.
4.மிருகங்களிடமும்,பறவைகளிடமும் கருனணயுடன் பழகுவார்.
5.ஏழைகளிடம் மிகவும் இரக்கம் காட்டுவார்.
6.தன் வேலைகளை தானே செய்து கொண்டு மற்றவர்களுக்கும் உதவிகள் செய்வார்.
7.பொறுமை வாய்ந்தவர்.
8.தனக்கு தீமை செய்தவர்களையும் மன்னிக்கும் குணம் உடையவர்.
9.எல்லோரையும் சந்தோஷப்படுத்துபவர்.
10.கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்.
11.எந்த நேரத்திலும் பொய்யே சொல்லமாட்டார்.
12.விருந்தினரை உபசரிப்பதில் அக்கரை கொண்டவர்.
13.அன்பு ஒன்றே அவரது சக்தி வாய்ந்த ஆயுதம்.

திங்கள், 11 மார்ச், 2019

உயர்ந்த உள்ளம்

வள்ளலார் தம் இளம் வயதில் ஒருநாள் நடந்து வந்து கொண்டிருந்தார்.நீண்ட தூரம் நடந்ததால் களைப்பு ஏற்பட்டது.எனவே ஓய்வெடுக்க விரும்பினார்.வழியில் சத்திரம் ஒன்று இருந்தது,அதன் திண்ணையில் படுத்து உறங்கினார்.அப்போது ஒருவன் அங்கு வந்தான்.படுத்திருந்த வள்ளலாரின் காதில் கடுக்கன் இருப்பதைக் கண்டான் அதனைத் தனதாக்கிக் கொள்ள முடிவெடுத்தான்.தங்கக்கடுக்கனை மெதுவாக  கழற்றினான்.அவனது செயலை அறிந்தும் வள்ளளார் கண் மூடியபடியே படுத்திருந்தார்.ஒரு கடுக்கனைக் கழற்றியவுடன்,மறு காதில் உள்ள கடுக்கனை அவன் கழற்றுவதற்கு ஏதுவாகத் திரும்பிப் படுத்தார்.அவன் அதையும் கழற்றிக் கொண்டு அந்த இடத்தைவிட்டு அகன்று செல்ல முற்பட்டான்,அப்போது வள்ளலார் மென்மையான குரலில் "அப்பா ,இவை இரண்டும் தங்கக்கடுக்கன்கள்.குறைந்த விலைக்கு விற்றுவிடாதே!மேலும் ,ஒரு கடுக்கனுடன்  சென்றால் உன்னைத் திருடன் என எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள்.எனவே தான் இரண்டு கடுக்கன்களையும் நீ எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பாகத் திரும்பிப்படுத்தேன்" என்றார்.வள்ளலார் கூறியதைக் கேட்ட அவன் வெட்கித் தலை குனிந்தான்.இவ்வாறு தம் பொருளை கவர்ந்தவரிடம் கூட அன்பு காட்டிய உயர்ந்த உள்ளம் கொண்டவர் வள்ளலார்.

காதணி விழா

காதணி விழா செய்ய உகந்த நட்சத்திரங்கள்
1.அஸ்வினி.
2.பரணி.
3.ரோகிணி.
4.திருவாதிரை.
5.பூசம்.
6.ஆயில்யம்.
7.மகம்.
8.பூரம்.
9.அஸ்தம்.
10.சுவாதி.
11.அனுசம்.
12.கேட்டை.
13.மூலம்.
14.பூராடம்.
15.திருவோணம்.
16.சதயம்.
17.உத்திரட்டாதி.
18.ரேவதி.
தேய்பிறை காலங்களில் மேலே கண்ட நட்சத்திரங்களில் காதணி விழா செய்ய உத்தமம்.


வெள்ளி, 1 மார்ச், 2019

எந்த ராசிக்கு எந்த ராசி வசியம்

வணக்கம்.
மேச ராசிக்கு வசியமாகும் ராசிகள் :சிம்மம்,ரிசபம்.
ரிசப ராசிக்கு வசியமாகும் ராசிகள்:கடகம்,துலாம்.
மிதுன ராசிக்கு வசியமாகும் ராசி:கன்னி,
கடக ராசிக்கு வசியமாகும் ராசிகள்: விருச்சிகம்,தனுசு.
சிம்ம ராசிக்கு வசியமாகும் ராசி:மகரம்.
கன்னி ராசிக்கு வசியமாகும் ராசிகள்: ரிசபம், மீனம்.
துலாம் ராசிக்கு வசியமாகும் ராசி: மகரம்.
விருச்சிக ராசிக்கு வசியமாகும் ராசிகள்: கன்னி,மீனம்.
தனுசு ராசிக்கு வசியமாகும் ராசி: மீனம்.
மகர ராசிக்கு வசியமாகும் ராசி: கும்பம்.
கும்ப ராசிக்கு வசியமாகும் ராசி: மீனம்.
மீன ராசிக்கு வசியமாகும் ராசி: மகரம்.

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...