ஒவ்வொரு மாதமும் எந்த நட்சத்திரப் பாதத்தில் அமாவாசை ஏற்படும் என்பதைப் பார்ப்போம்.
தமிழ் மாதங்கள் - நட்சத்திரப்பாதம்
1. சித்திரை - அஸ்வினி 4 ஆம் பாதம்
2. வைகாசி- ரோகிணி 4 ஆம் பாதம்.
3. ஆனி-திருவாதிரை 4 ஆம் பாதம்
4. ஆடி-பூசம் 4 ஆம் பாதம்.
5. ஆவணி- மகம் 4 ஆம் பாதம்.
6. புரட்டாசி-உத்திரம் 4 ஆம் பாதம்
7. ஐப்பசி-சுவாதி 4 ஆம் பாதம்.
8. கார்த்திகை-அனுஷம் 4 ஆம் பாதம்
9.மார்கழி-மூலம் 4 ஆம் பாதம்.
10.தை-உத்திராடம் 4 ஆம் பாதம்
11.மாசி-அவிட்டம் 4 ஆம் பாதம்.
12. பங்குனி-உத்திரட்டாதி 4 ஆம் பாதம்
சனி, 14 ஆகஸ்ட், 2021
எந்த நட்சத்திரத்தில் அமாவாசை ஏற்படும்
7 ஆம் அதிபதி எங்கு இருக்கக் கூடாது.
துலாம் லக்னத்திற்கு 7 ஆம் அதிபதி செவ்வாய் 6 ஆம் இடமான மீனம் இராசியில் இருக்கக்கூடாது, 8 ஆம் இடமான ரிஷப இராசியில் இருக்கக்கூடாது அல்லது 12 ஆம் இடமான கன்னி இராசியில் இருக்கக்கூடாது. விருச்சிக லக்னத்திற்கு 7 ஆம் அதிபதியான சுக்கிரன் 6 ஆம் இடமான மேஷ இராசியில், 8 ஆம் இடமான மிதுன இராசியில் அல்லது 12 ஆம் இடமான துலாம் இராசியில் இருக்கக்கூடாது. தனுசு லக்னத்திற்கு 7 ஆம் அதிபதியான புதன் 6 ஆம் இடமான ரிஷப இராசியில், 8 ஆம் இடமான கடக இராசியில் அல்லது 12 ஆம் இடமான விருச்சிக இராசியில் இருக்கக்கூடாது. மகர லக்னத்திற்கு 7 ஆம் அதிபதியான சந்திரன் 6 ஆம் இடமான மிதுன இராசியில், 8 ஆம் இடமான சிம்ம இராசியில் அல்லது 12 ஆம் இடமான தனுசு இராசியில் இருக்கக் கூடாது, கும்ப லக்னத்திற்கு 7 ஆம் அதிபதியான சூரியன் 6 ஆம் இடமான கடக இராசியில், 8 ஆம் இடமான கன்னி இராசியில் அல்லது 12 ஆம் இடமான மகரம் இராசியில் இருக்கக்கூடாது.மீனம் லக்னத்திற்கு 7 ஆம் அதிபதியான புதன் 6 ஆம் இடமான சிம்மம் இராசியில், 8 ஆம் இடமான துலாம் இராசியில் அல்லது 12 ஆம் இடமான கும்பம் இராகியில் இருக்கக் கூடாது.
வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021
7 ஆம் அதிபதி எங்கு இருக்கக் கூடாது.
லக்னத்திற்கு 7 ஆம் அதிபதி ஜாதகத்தில் 6, 8, 12 போன்ற இடங்களில் இருக்ககூடாது. மேஷலக்னம் என்றால் இவற்றின் 7 ஆம் அதிபதி சுக்கிரன் இந்த கிரகம் லக்னத்திற்கு 6ஆம் இடமான கன்னி இராசியில் , 8 ஆம் இடமான விருச்சிக இராசியில் அல்லது 12 ஆம் இடமான மீனத்தில் இருக்கக் கூடாது.
ரிஷப லக்னத்திற்கு 7 ஆம் அதிபதி செவ்வாய் இந்த கிரகம் 6 ஆம் இடமான துலாம் இராசியில், 8 ஆம் இடமான தனுசு இராசியில் அல்லது 12 ஆம் இடமான மேஷ இராசியில் இருக்கக் கூடாது. மிதுன லக்னத்திற்கு 7 ஆம் அதிபதி குருபகவான் மிதுன லக்னத்திற்கு 6 ஆம் இடமான விருச்சிக இராசியில், 8 ஆம் இடமான மகர இராசியில் அல்லது 12 ஆம் இடமான ரிஷப இராசியில் இருக்கக்கூடாது. கடகலக்னத்திற்கு 7 ஆம் அதிபதி சனிபகவான் கடக லக்னத்திற்கு 6 ஆம் இடமான தனுசு இராசியில், 8 ஆம் இடமான கும்ப இராசியில் அல்லது 12 ஆம் இடமான மிதுன இராசியில் இருக்ககூடாது. சிம்ம லக்னத்திற்கு 7ஆம் அதிபதி சனிபகவான் 6 ஆம் இடமான மகரத்தில், 8 ஆம் இடமான மீனத்தில் அல்லது 12 ஆம் இடமான கடகத்தில் இருக்கக் கூடாது. கன்னி லக்னத்திற்கு 7 ஆம் அதிபதியான குருபகவான் 6 ஆம் இடமான கும்ப இராசியில், 8 ஆம் இடமான மேஷ இராசியில் அல்லது 12 ஆம் இடமான சிம்ம இராசியில் இருக்கக்கூடாது.
மாதுளம்பழத்தின் மகத்துவம்
மாதுளம்பழததில் உள்ள விதைகளை சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கற்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது. மாதுளம்பழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தத்தால் ஏற்படும் வாந்தி நிற்கும். மலத்துடன் இரத்தம் சேர்த்து வந்தால் மாதுளம்பழச்சாற்றை அருந்தவேண்டும்.மாதுளம் பழத்தில்இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை உள்ளது.மாதுளம்பழத்தில் வைட்டமின் A சத்து நிறைந்துள்ளது. இது கல்லீரல் பழுதுபடாமல் காப்பாற்றுகிறது. வயிற்றுப் புண், இருதய வலி இவற்றை குணப்படுத்தும் தன்மைமாதுளம்பழத்திற்கு உள்ளது.
திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்
திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...