செவ்வாய், 28 மே, 2019

கேது பகவான்

பொன்னைதனுரத்திற் கொண்டோன் புலவர் பொருட்டாலாழி
தன்னையே கடைந்து முன்னர் தண்ணமுதளிக்கலுற்ற
பின்னை நின் கரவாணுண்ட பெட்பினிற்சிரம் பெற்றுய்ந்தா
யென்னையாள் கேது வேயிவ்விருநிலம் போற்றத்தானே!
          கேது பகவான் பாடலை தமிழ் மொழியில் பாடி கேது பகவான் அருளைப் பெருவோம்

இராகு பகவான்

வாகுசேர்நெடுமான் முன்னம் வானவர்க் கமுதமீயப்
போகுமக்காலையுன்றன் புணர்பினாற் சிரமேயற்று
பாகுசேர்மொழியாள் பங்கன் பரன்கையில் யீண்டுபெற்ற
இராகுவேயுனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே
          இராகு பகவான் பாடலை தமிழ் மொழியில் பாடி இராகு பகவான் அருளைப் பெருவோம்.

சனி பகவான்

முனிவர்கடேவரேனும் மூர்த்திகண் முதலினோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வுன் மகிமைய தல்லாலுண்டோ
கனிவுல தெய்வ நீயே கதிர்சேயே காகமேறுஞ்
சனீஸவரனே யுனைத்துதிப்பேன் றயியனேற்கருள் செய்வாயே!
            சனி பகவான் பாடலை தமிழ் மொழியில் பாடி சனி பகவான் அருளைப் பெருவோம்.

ஞாயிறு, 26 மே, 2019

சுக்கிர பகவான்

மூர்க்கவான் சூரவாணன் முதலினோர் குருவாம் வையங்
காக்கவான் மழை பெய்விக்குங்கவிமகன் கனகமீவோன்
தீர்க்க வானவர்கள் போற்ற செத்தவர் தனை யெழுப்பும்
பார்க்கவன் சுக்கிராச்சாரி பாதபங்கயமே போற்றி!
             சுக்கிர பகவானின் பாடலைத் தமிழ்மொழியில் பாடி சுக்கிர பகவானின் அருளைப் பெருவோம்.

குரு பகவான்

மறை யிரு களைனூல் வல்லோன் வானவர்க்காசான் மந்திரி
நரை சொரி கற்பகப் பொன்னாட்டினுக்கதிபனாகி
நிறைதனஞ்சிவிகை மண்ணி வீடு போகத்தைநல்கு
மிறையவன் குருவியாழ மிருமலர் பாதம் போற்றி!
                             குரு பகவானின் பாடலை தமிழ் மொழியில் பாடி குரு பகவானின் அருளைப் பெருவோம்.

புதன் பகவான்

மதனனூன் முதலாநான்கு மறைபுகல் கல்விஞானம்
விதமுடனவரவர்க்கு விஞ்சை களருள் வோன்றிங்கள்
சுதன்களப சவுபாக்கியஞ் சுகம் பல கொடுக்க வல்லன்
புதகவிப் புலவன் திருமால் பொன்னடி போற்றி!போற்றி!
தமிழ் மொழியில் புதன் பகவான் பாடலை பாடி புதன் பகவானின் அருளைப் பெருவோம்.


செவ்வாய், 21 மே, 2019

செவ்வாய் பகவான்

வசன நற்றைர்யத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ரமங்கள் போர்தனில் வெற்றியண்மை
நிசமுடனவரவர்க்கு நீணிலந்தனிலளிக்கும்
குசனில மகனாஞ் செவ்வாய் குறைகழல் போற்றி!போற்றி!
 தமிழ் மொழியில் செவ்வாய் பகவான் பாடலைப் பாடி, செவ்வாய் பகவானின் அருளைப் பெருவோம்

சந்திர பகவான்

அலை கடல்தனி நின்று மன்று வந்துதித்த போது
கலை வளர்திங்களாகிக் கடவுளரெவரு மேத்துஞ்
சிலை நுதல்மையாள் பங்கன் செஞ்சடை பிறையாய் மேறு
மலை வலமாக வந்த மதியமே போற்றி!
  தமிழ் மொழியில் சந்திர பகவானின் பாடலை பாடி சந்திர பகவானின் அருளைப் பெருவோம்.

வெள்ளி, 17 மே, 2019

சூரியபகவான்

காசினி யிருளை நீக்கும் கதிரொளியாகி யெங்கும்
பூசனண யுலகோர் போற்றப் புசிப் பொடு சுகத்தை நல்கும்
வாசியே ழுடய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகாயெனனரட்சிப்பாய் செங்கதிரவனெ போற்றி.
   தமிழ் மொழியில் சூரிய பகவானன வணங்கி சூரிய பகவானின் அருளைப் பெருங்கள்.
     

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...