வெள்ளி, 7 செப்டம்பர், 2018

உலக அளவில் புகழ் பெற செய்யும் பரிவர்த்தனை யோகம் .

வணக்கம்.
உலக அளவில் புகழ் பெற செய்யும் பரிவர்த்தனை யோகம் .
ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் அல்லது மூன்று கிரகங்கள் இடத்தை மாற்றி இருக்கும் போது இந்த யோகம் செயல்படும்.
 உதாரணமாக மிதுனராசிக்கு அதிபதியான புதன் பகவான் விருச்சிகராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு அதிபதியான செவ்வாய் பகவான் மிதுனராசியில் இருந்து,  கிரகங்கள் தங்கள் இருப்பிடத்தை மாற்றி இருப்பது பரிவர்த்தனை யோகமாகும்.
  இன்னும் ஒரு உதாரணம் முன்னால் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்கள் ஜாதகத்தில் குரு பகவான், சுக்கிரன் பகவான் இந்த  இரண்டு  கிரகங்கள் தங்கள் இருபபிடங்களை மாற்றி உள்ளது.
 இந்திரா காந்தி அவர்கள் ௧டக லக்னத்தில் பிறந்தவர். கடக லக்னத்திற்கு 6வது வீட்டிற்கு அதிபதியான குரு பகவான் ரிசப ராசியில் உள்ளது .ரிசப ராசிக்கு அதிபதியான சுக்கிர பகவான் தனுசு ராசியில் உள்ளது. லக்னாதிபதியான சந்திர பகவான் மகர ராசியில் உள்ளது, மகர ராசிக்கு அதிபதியான சனி பகவான் கடக ராசியில் தங்கள் இருப்பிடங்களை கிரகங்கள் மாற்றி அமைத்து உள்ளது.  இவர் ஜாதகத்தில் செவ்வாய் சிம்ம ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு அதிபதியான சூரியன் விருச்சிக ராசியில் உள்ளது.
இவ்வாறு கிரகங்கள் இடம்மாற்றி உள்ள ஜாதகர்கள்  கண்டிப்பாக உலக புகழ் பெறுவார்கள்.
                                                                 நன்றி .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...