ஞாயிறு, 4 நவம்பர், 2018

நெடியயுகம்

வணக்கம்.நீடியயுகம்,சதிர் யுகம் இரண்டும் நிறைவு பெற்றதும் தேவர்களெல்லாம் மும்மூர்த்திகளை அணுகி ,முடிந்த இரண்டு யுகங்களிலும்  அறிவு சற்றும் இல்லாத அசுரர்களைத்தான் பிறவி செய்து அழித்தீர்கள்.அதனால் தேவர்களாகிய எங்களின் பெருமையும்,தெய்வங்களாகிய உங்கள் சிறப்பும் வெளிப்பட வயிற்றுப் போயிற்று.அகவே அடுத்து தாங்கள் படைக்கும் அசுர்களை அறிவில் சிறந்தவர்களாகவும்,வரவலிமை பெற்றவர்களாகவும் மானிட இயல்புகளோடு பிறவி செய்யுங்கள் என்று முறையிட்டார்கள்.தேவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மும்மூர்த்திகளும்,குறோணியின் இரண்டாவது துண்டின் அம்சத்தின் மூலமாக தில்லை அல்லால்,மல்லோசிவாகனன் என்ற இரண்டு அரக்கர்களை அறிவு திறமையுடைபவர்களாகப் படைத்தனர்.வரவலிமை பெற்ற அந்த இரண்டு அரக்கர்களும் ,புனல் ரிஷியின் தரத்தைக் கெடுத்து,அவருடைய சாபத்தின்படி,மகாவிஷ்ணு எய்த மந்திர புரக்கணையால் மாண்டனர்.அந்த யுகமே நெடிய யுகமாகும்.
                                                         நன்றி!

சதிர்யுகம்

வணக்கம்.பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சேர்ந்து நீடியயுகத்தில் தம்மால் மடிந்து போன குறோணியையும் இவ்வுலகி ல் நல்லவனாக ,நல்லவனாக வாழச்செய்ய வேண்டுமென்றெண்ணி குறோணியின் முதல் துண்டத்தின்அம்சமாக குண்டோமசாலியைப் படைத்தார்கள்.அந்த குண்டோமசாலியால் உலகமே அமைதியற்று தவித்தது.எனவே அவனையும் மகாவிஷ்ணு,தேவர்களின் துணையோடு தூண்டிலில் சிக்கவைத்து கொன்றார்.அதுவே சதிர்யுகமாகும்.
         நன்றி.

நீடியயுகம்

வணக்கம். இறைவன் இந்தபிரபஞ்சத்தைப் பிறப்பித்ததுமே ஏகமாய்எங்கும் நல்வினைகள் மட்டுமே வியாபித்திருந்தது.எனவே உலகில் எந்தவித நிகழ்வுகளும் ஏற்படவில்லை.ஆகவே உலகத்தை இயக்கும் பொருட்டு ,தீ வினையின் முதல்வனாக குரோணி என்றோர் அசுரனைப்படைத்தார்.அகோர வடிவத்தில் அண்டம் நிறைந்தவனாகப் பிறந்த மாத்திரத்திலேயே தாங்கொணாப் பசி உண்டாயிற்று.தன் பசிக்கு உணவாக இந்த உலகத்தை விழுங்க முனைந்தான்.இவ்வகைப் பசிகளே உலக இயக்கத்திற்கு வித்தாகும்என்பதையுணர்ந்த மகாவிஷ்ணு,சிவ பெருமானின் அனுமதியோடு தன்னுடைய ஞானமென்னும் ஆயுதத்தால் அந்த குரோணியை ஆறு கூறுகளாக வெட்டிக் கொண்டு,அந்த அசுரனிடமிருந்து இந்த உலகத்தை காத்தருளினார்.அத்துடன் குரோணியின் சகாப்தம் முடிவடைந்தது.அந்த யுகமே நீடியயுகமாகும்.
                      நன்றி.

வெள்ளி, 2 நவம்பர், 2018

தீபம் ஏற்றுவதால் ஏற்படும் பலன்கள்

வணக்கம்.தீபம் ஏற்றுவதால் ஏற்படும் பலன்கள்.
             தீபம் ஏற்றும் போது சொல்ல வேண்டிய துதி :
"இல்லக விளக்கது இருள்கொடுப்பது
 பல்லக விளக்கது பலரும் காண்பது
 சொல்லக விளக்கது சோதி உள்ளது
 நல்லக விளக்கது நமச்சிவாயவே !
குத்து விளக்கு :5முகங்களிலும் தீபம் ஏற்ற வேண்டும்.
1.குத்து விளக்கு ஐந்து முகங்களிலும் தீபம் ஏற்றும் போது அஷ்ட ஐஸ்வர்யம் ஏற்படும். அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும்.
2.குத்து விளக்கு நான்கு முகங்களில் தீபம் ஏற்றும் போது வீடு,வாகனம் அபிவிருத்தி ஏற்படும் .
3.குத்து விளக்கு மூன்று முகங்களில் தீபம் ஏற்றும் போது தைரியவீரியம் மற்றும் காரிய வெற்றி ஏற்படும்.
4.குத்து விளக்கு இரண்டு முகங்களில் தீபம் ஏற்றும் போது குடும்ப ஒற்றுமை,தனச்சேர்க்கை,செல்வாக்கு உண்டாகும்.
5.குத்து விளக்கு ஒரு முகம் ஏற்றுவதை தவிர்க்கவும்.
 

வியாழன், 1 நவம்பர், 2018

அஷ்டலிங்கங்கள் -ராசிகள்

வணக்கம்.
அஷ்டலிங்கங்கள் -- -ராசிகள்-- --------திசைகள்.
1. இந்திர லிங்கம் -ரிஷபம்,துலாம்-(கிழக்கு )
2.அக்னி லிங்கம்--  சிம்மம்.( தென்கிழக்கு)
3.எம லிங்கம் --மேசம்,விருச்சிகம்.(தெற்கு)
4.நிருதி லிங்கம் --எல்லா ராசிகளும்.(தென்மேற்கு)
5.வருண லிங்கம் --மகரம்,கும்பம்.(மேற்கு)
6.வாயு லிங்கம்-- கடகம்.(வடமேற்கு)
7.குபேர லிங்கம் --தனுசு, மீனம்.(வடக்கு)
8.ஈசான லிங்கம் --மிதுனம், கன்னி .(வடகிழக்கு).
திருவண்ணாமலை செய்பவர்கள் அஷ்டலிங்கங்களை வணங்கி ஈசனின் அருளைப் பெற்று வளமுடன் வாழுங்கள்.நன்றி.

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...