சனி, 24 பிப்ரவரி, 2024

மயில் பஞ்சப்பட்சியின் நட்பு, பகை பஞ்சப்பட்சிகள்

 மயில் பஞ்சப் பட்சியின் நட்பு, பகை பஞ்சப் பட்சிகள்.

     திருவோணம் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இந்த 6 நட்சத்திரங்களில் வளர்பிறை காலங்களில் அதாவது அமாவாசை திதிக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் இருந்து பெளர்ணமி திதி வரை பிறந்தவர்களின் நட்சத்திரப் பஞ்சப்பட்சி மயில்.

    மயில் பஞ்ச பட்சிக்கு வளர்பிறை காலத்தில் நட்பு பஞ்ச பட்சி வல்லூறு, கோழி.

பகை பஞ்ச பட்சி ஆந்தை, காகம்.

அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் இந்த 5 நட்சத்திரங்களில் தேய்பிறை காலங்களில் அதாவது பெளர்ணமி திதிக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் இருந்து அமாவாசை திதி வரை பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சி மயில்

    மயில் பஞ்சப்பட்சிக்கு தேய்பிறை காலங்களில் நட்பு பஞ்சப் பட்சி வல்லூறு, கோழி

பகை பஞ்சப் பட்சி ஆந்தை, காகம்

கோழி பஞ்சப் பட்சியின் நட்பு, பகை பஞ்சப்பட்சிகள்.

 

கோழி பஞ்சப்பட்சியின் நட்பு, பகை பஞ்சப்பட்சிகள்
     அனுஷம், கேட்டை, மூலம் பூராடம், உத்திராடம் இந்த 5 நட்சத்திரங்களில் வளர்பிறை காலங்களில் அதாவது அமாவாசை திதிக்கு அடுத்த நாளான பிரதமை திதி வரை பிறந்தவர்களின் நட்சத்திரப்பஞ்ச பட்சி கோழி.
வளர்பிறை காலத்தில் கோழி பஞ்சப்பட்சிக்கு நட்பான பஞ்சப்பட்சி மயில், காகம்.
கோழி பஞ்ச பட்சிக்கு பகையான பஞ்சப்பட்சி வல்லூறு, ஆந்தை.
      திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் இந்த 6 நட்சத்திரங்களில் தேய்பிறை காலங்களில் அதாவது பௌர்ணமி திதிக்கு அடுத்த திதியான பிரதமை திதியில் இருந்து அமாவாசை திதி வரை பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சி கோழி.
  தேய்பிறை காலத்தில் கோழி பஞ்சப்பட்சிக்கு நட்பு பஞ்சப்பட்சி மயில், ஆந்தை.
பகை பஞ்சப்பட்சி காகம், வல்லூறு .

காகம் பஞ்சப்பட்சியின் நட்பு, பகை பஞ்சப்பட்சிகள்

 காகம் பஞ்சப்பட்சியின் நட்பு, பகை பஞ்சப் பட்சிகள்

 உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் இந்த 5 நட்சத்திரங்களில் வளர்பிறை காலங்களில் அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் இருந்து பெளர்ணமி திதி வரையில் பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சி காகம் பஞ்சபட்சியாகும்.

     இந்த காகம் பஞ்ச பட்சிக்கு நட்பான பஞ்ச பட்சி ஆந்தை, கோழி.

காகம் பஞ்ச பட்சிக்கு பகை பஞ்ச பட்சி வல்லூறு, மயில்.

   உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் இந்த 5 நட்சத்திரங்களில் அதாவது பெளர்ணமி திதிக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் இருந்து அமாவாசை திதி வரை பிறந்தவர்களின் நட்சத்திரப் பஞ்ச பட்சி காகம்.

 தேய்பிறை காலத்தில் காகம் பஞ்சப்பட்சியில் பிறந்தவர்களின் நட்பு பஞ்சப்பட்சி ஆந்தை, வல்லூறு .

பகை பஞ்சப்பட்சி மயில், கோழி.


வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

ஆந்தை பஞ்சபட்சியின் நட்பு ,பகை பஞ்சப் பட்சிகள்

 ஆந்தை பஞ்சபட்சியின் நட்பு பகை பஞ்சபட்சிகள்

திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் இந்த 6 நட்சத்திரங்களில் வளர்பிறை காலங்களில் அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் இருந்து பெளர்ணமி திதி வரையில் பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சி ஆந்தை பஞ்ச பட்சியாகும்.

இந்த ஆந்தை பஞ்ச பட்சிக்குக்கு நட்பான பஞ்ச பட்சி வல்லூறு, காகம்.

இந்த ஆந்தை பஞ்ச பட்சிக்கு பகையான பஞ்ச பட்சி மயில், கோழி.

அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் இந்த 5 நட்சத்திரங்களில் தேய்பிறை காலங்களில் அதாவது பெளர்ணமி திதிக்கு பிறகு வரும் பிரதமை திதியில் இருந்து அமாவாசை திதி வரை பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சியும் ஆந்தை தான

தேய்பிறை காலத்தில் ஆந்தை பஞ்சபட்சியில் பிறந்தவர்களின் நட்பு பஞ்சப்பட்சி கோழி, காகம்

பகை பஞ்சப்பட்சி வல்லூறு, மயில்.

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...