வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

7 ஆம் அதிபதி எங்கு இருக்கக் கூடாது.

 லக்னத்திற்கு 7 ஆம் அதிபதி ஜாதகத்தில் 6, 8, 12 போன்ற இடங்களில் இருக்ககூடாது. மேஷலக்னம் என்றால் இவற்றின் 7 ஆம் அதிபதி சுக்கிரன் இந்த கிரகம் லக்னத்திற்கு 6ஆம் இடமான கன்னி இராசியில் , 8 ஆம் இடமான விருச்சிக இராசியில் அல்லது 12 ஆம் இடமான மீனத்தில் இருக்கக் கூடாது.

ரிஷப லக்னத்திற்கு 7 ஆம் அதிபதி செவ்வாய் இந்த கிரகம் 6 ஆம் இடமான துலாம் இராசியில், 8 ஆம் இடமான தனுசு இராசியில் அல்லது 12 ஆம் இடமான மேஷ இராசியில் இருக்கக் கூடாது. மிதுன லக்னத்திற்கு 7 ஆம் அதிபதி குருபகவான் மிதுன லக்னத்திற்கு 6 ஆம் இடமான விருச்சிக இராசியில், 8 ஆம் இடமான மகர இராசியில் அல்லது 12 ஆம் இடமான ரிஷப இராசியில் இருக்கக்கூடாது. கடகலக்னத்திற்கு 7 ஆம் அதிபதி சனிபகவான் கடக லக்னத்திற்கு 6 ஆம் இடமான தனுசு இராசியில், 8 ஆம் இடமான கும்ப இராசியில் அல்லது 12 ஆம் இடமான மிதுன இராசியில் இருக்ககூடாது. சிம்ம லக்னத்திற்கு 7ஆம் அதிபதி சனிபகவான் 6 ஆம் இடமான மகரத்தில், 8 ஆம் இடமான மீனத்தில் அல்லது 12 ஆம் இடமான கடகத்தில் இருக்கக் கூடாது. கன்னி லக்னத்திற்கு 7 ஆம் அதிபதியான குருபகவான் 6 ஆம் இடமான கும்ப இராசியில், 8 ஆம் இடமான மேஷ இராசியில் அல்லது 12 ஆம் இடமான சிம்ம இராசியில் இருக்கக்கூடாது.

மாதுளம்பழத்தின் மகத்துவம்

 மாதுளம்பழததில் உள்ள விதைகளை சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கற்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது. மாதுளம்பழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தத்தால் ஏற்படும் வாந்தி நிற்கும். மலத்துடன் இரத்தம் சேர்த்து வந்தால் மாதுளம்பழச்சாற்றை அருந்தவேண்டும்.மாதுளம் பழத்தில்இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை உள்ளது.மாதுளம்பழத்தில் வைட்டமின் A சத்து நிறைந்துள்ளது. இது கல்லீரல் பழுதுபடாமல் காப்பாற்றுகிறது. வயிற்றுப் புண், இருதய வலி இவற்றை குணப்படுத்தும் தன்மைமாதுளம்பழத்திற்கு உள்ளது. 

சனி, 5 ஜூன், 2021

முகப்பொலிவிற்கானஹெர்பல் பவுடர்


தேவையான பொருட்கள்

பாசிப்பயறு - 250 கிராம்.

பார்லி - 100 கிராம்.

வெள்ளரி விதை - 50 கிராம் .

கசகசா - 10 கிராம்.

ரெட் சாண்டல் - 50 கிராம்.

பச்சை கற்பூரம் - 5 கிராம்.

காய்ந்த எலுமிச்சைத்தோல் - 5

செய்முறை:

பாசிப்பயறு, பார்லி, வெள்ளரி விதை, கசகசா, ரெட் சாண்டல், பச்சை கற்பூரம், காய்ந்த எலுமிச்சைத் தோல் இவை அனைத்தையும் மிக்சியில் அரைத்து சலித்து வைக்கவும். 1ஸ்பூன் இந்த ஹெர்பல் பவுடருடன் ரோஸ்வாட்டர் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் ஊறிய பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்

வெள்ளி, 20 டிசம்பர், 2019

கோதுமை லட்டு.

 கோதுமை லட்டு
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு -600கிராம்.
சர்க்கரை-250கிராம.
முட்டை-2.
தேங்காய் எண்ணெய்-500மி.லி.
தேங்காய்ப் பால்-1கப்.
மஞ்சள் தூள்-தேவையான அளவு.
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
 கோதுமை மாவில் 500 கிராம் மட்டும் எடுத்து தண்ணீர் கலந்து உப்பு சேர்த்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேங்காய்ப் பால் சர்க்கரை இவற்றை போட்டு பொன்னிறமாக வரும்வரை காய்த்து எடுக்க வேண்டும்.பிறகு பிசைந்து வைத்த மாவை அதனுள் கொட்டி பதத்திற்கு வரும் வரை கிளறி இறக்கவேண்டும்.
மீதமுள்ள 100கிராம் மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு முட்டையை உடைத்து ஊற்றி மஞ்சள் தூளையும் போட்டு நீர் ஊற்றி கெட்டியாக கிளறி வைக்கவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மாவை உருண்டையாக உருட்டி கலக்கிய மாவினுள் தோய்த்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்க வேண்டும்.
சுவையான கோதுமை லட்டு தயார்.

கோழி அடை

கோழி அடை
தேவையான பொருட்க்கள்
கோழி-1கிலோ.
புழுங்கலரிசி-1/2படி.
தேங்காய்-1
மிளகாய் வத்தல்-10.
கொத்தமல்லி-3மேசை கரண்டி.
மஞ்சள்தூள்-2மேசை கரண்டி.
தேங்காய் எண்ணெய்-1மேசை கரண்டி.
கறிவேப்பிலை-சிறிதளவு.
தாளிப்பதற்கு:
தாளிப்பதற்கு தேவையான அளவு வெங்காயம்,பெருஞ்சீரகம்,பட்டை,கிராம்பு.
செய்முறை:
புழுங்கலரிசியை 3மணிநேரம் ஊறவைத்து கெட்டியாக கொழுக்கட்டை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
தேங்காயை துருவி உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.கோழியை சுத்தம் செய்து கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வத்தல்,மல்லியை வறுத்து சேர்த்து மைபோல் அரைத்துக்கொள்ளவும்.
 ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம்,பட்டை கிராம்பு, நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிவந்ததும் கோழி கறியை போட்டு சிறிது வதக்கி மிளகாய்த்தூள் அரைத்த
மசாலாவையும் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.கறி பாதி வெந்ததும் தேவையான அளவு உப்பு போட்டு கிளறிவிட்டு மாவை சிறிய வடைகளாக தட்டி நடுவில் துளை போட்டு அதில் போடவும்.கறியும்,அடைகளும்
நன்றாக வெந்ததும் கறிவேப்பிலை,கொத்தமல்லியை நறுக்கிப் போட்டு இறக்கவும்.சுவையான கோழி அடை தயார்.


    

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...