திங்கள், 29 ஜனவரி, 2024

வல்லூறு - நட்பு, பகை பஞ்சப் பட்சி

 வல்லூறு பஞ்சப் பட்சியின் நட்பு, பகை பஞ்சப் பட்சிகள்

அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகினி, மிருகசீரிடம் இந்த 5 நட்சத்திரங்களில் வளர்பிறை காலங்களில் அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் இருந்து பெளர்ணமி திதி வரையில் பிறந்தவர்களின் நட்சத்திரப் பட் சி வல்லூறு பஞ்சப் பட்சியாகும். இந்த வல்லூறு பஞ்சப் பட்சிக்கு நட்பான பஞ்சப் பட்சி மயில் மற்றும் ஆந்தை

   இந்த வல்லூறு பஞ்சப் பட்சி க்கு பகை யான பஞ்ச பட்சி

காகம் மற்றும் கோழி

திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

இந்த 6 நட்சத்திரங்களில் தேய்பிறை திதியில் அதாவது  பௌர்ணமி திதி க்கு பிறகு வரும் பிரதமை திதியில் இருந்து அமாவாசை திதி வரை பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சியும் வல்லூறு தான்

தேய்பிறை காலத்தில் வல்லூறு பட்சியில் பிறந்தவர்களின் நட்பு பஞ்சப்பட்சி

மயில், காகம்

பகை பஞ்சப்பட்சி ஆந்தை, கோழி.

வியாழன், 25 ஜனவரி, 2024

தேய்பிறை நட்சத்திரப்பட்சி 56 556

 

தேய்பிறை நட்சத்திரப் பட்சி - 56 556
தேய்பிறை நட்சத்திரப்பட்சி (பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரை பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சி)
அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் இந்த 5 நட்சத்திரங்களில் தேய்பிறையில் பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சி -மயில்
திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம்,பூரம் இந்த 6 நட்சத்திரங்களில் தேய்பிறையில்  பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சி - கோழி
உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் இந்த 5 நட்சத்திரங்களில் தேய்பிறையில்  பிறந்தவர்களின் நட்சத்திரப் பட்சி - காகம்
அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்
இந்த 5 நட்சத்திரங்களில் பிறந்தவர்களில் தேய்பிறையில் பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சி - ஆந்தை
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இந்த 6 நட்சத்திரத்திரங்களில் தேய்பிறையில் பிறந்தவர்களின் நட்சத்திரப்பட் சி - வல்லூறு

வளர்பிறை நட்சத்திரப்பட்சி - 56556

 வளர்பிறை நட்சத்திரப் பட்சி (பிரதமை திதியில் இருந்து பெளர்ணமி திதி வரை பிறந்தவர்களின் நட்சத்திர பட்சி)

நட்சத்திரங்கள் மொத்தம் 27. இந்த 27 நட்சத்திரத்தில் அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் இந்த 5 நட்சத்திரங்கள் வல்லூறு என்னும் பட்சி வகையைச் சார்ந்தது.

திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் இந்த 6 நட்சத்திரங்கள் ஆந்தை என்னும் பட்சி வகையைச் சார்ந்தது.

உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் இந்த 5 நட்சத்திரங்கள் காகம் என்னும் பட்சி வகையைச் சார்ந்தது.

அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் இந்த 5 நட்சத்திரங்கள் கோழி என்னும் பட்சி வகையைச் சார்ந்தது.

திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இந்த 6 நட்சத்திரங்கள் மயில் என்னும் பட்சி வகையைச் சார்ந்தது.

வளர்பிறையில் வரும் நட்சத்திரங்களின் நட்சத்திர பட்சிகளை ஞாபகம் வைத்துக் கொள்ள இந்த 56 556 என்ற எண்களை பயன்படுத்தலாம்.


வியாழன், 31 ஆகஸ்ட், 2023

விநாயகரும் மலர் வழிபாடும்


விநாயகர் சதுர்த்தி அன்று வழிபட வேண்டிய மலர்களும் அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகளும்1. மல்லிகை, முல்லை - தீயவை நீங்கும் 2. ரோஜா - எண்ணங்கள் ஈடேறும் 3. பட்டு ரோஜா - இறையருள் பெறலாம் 4. அரளிப்பூ - மனநிம்மதி கிடைக்கும் 5. தாமரைப்பூ - செல்வ வளம் பெருகும் 6. வெள்ளைத் தாமரை - சகல சக்தி கிடைக்கும். 7. வில்வப்பூ - அரச பதவி பெறலாம் 8. சங்குப் பூ - பெருஞ்செல்வம் கிட்டும் 9. ஜாதிப்பூ - வைகுண்ட பதவி கிட்டும் 10. அல்லிப் பூ - வளம் தரும் 11. விருட்சப் பூ - நோய்கள் நீங்கும் 12. எருக்கம் பூ - மன தைரியம் பெறலாம் 13. மகிழம்பூ - பொறுமை தரும் 14. செவ்வந்திப் பூ - ஆன்மீக உயர்வு பெறலாம் 15. பவளமல்லிகை - நல்ல எண்ணம் வளரும்


புதன், 26 ஜூலை, 2023

ஆடி பதினெட்டாம் பெருக்கு

ஆடி பதினெட்டாம் பெருக்கு ஆடிமாதம் 18 ஆம் நாள் (3 - 08 - 2023) வியாழக்கிழமை அன்று அம்மன் கோயில்களிலும், திருச்சி காவேரி கரைகளிலும், மற்ற நீர்நிறைந்த இடங்களிலும், கிராமங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.பாண்டவர்கள் போர் முடிந்தபின்பு தாங்கள் பயன்படுத்திய ஆயுதங்களை சுத்தம் செய்து  ஆற்றங்கரையில் போரில் இறந்த முன்னோர்களுக்கு ஆடி 18 ஆம் பெருக்கு அன்று திதி கொடுத்த தினம்.

சப்தகன்னியரை வழிபடுவதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேரும் என்பது நம்பிக்கை. ஆடி பதினெட்டாம் நாள் அன்று மக்கள் நீர் நிரம்பிய இடங்களான ஆறு, குளம், கடல் போன்ற இடங்களில் நீராடி இறைவனை வழிபடுவது வழக்கம். புதிதாக திருமணமான பெண்கள் தங்கள் தாலி சரடை மாற்றிக்கொள்ளும் நாள்.

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...