திங்கள், 27 மே, 2019

குரு பகவான்

மறை யிரு களைனூல் வல்லோன் வானவர்க்காசான் மந்திரி
நரை சொரி கற்பகப் பொன்னாட்டினுக்கதிபனாகி
நிறைதனஞ்சிவிகை மண்ணி வீடு போகத்தைநல்கு
மிறையவன் குருவியாழ மிருமலர் பாதம் போற்றி!
                             குரு பகவானின் பாடலை தமிழ் மொழியில் பாடி குரு பகவானின் அருளைப் பெருவோம்.

ஞாயிறு, 26 மே, 2019

புதன் பகவான்

மதனனூன் முதலாநான்கு மறைபுகல் கல்விஞானம்
விதமுடனவரவர்க்கு விஞ்சை களருள் வோன்றிங்கள்
சுதன்களப சவுபாக்கியஞ் சுகம் பல கொடுக்க வல்லன்
புதகவிப் புலவன் திருமால் பொன்னடி போற்றி!போற்றி!
தமிழ் மொழியில் புதன் பகவான் பாடலை பாடி புதன் பகவானின் அருளைப் பெருவோம்.


செவ்வாய், 21 மே, 2019

செவ்வாய் பகவான்

வசன நற்றைர்யத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ரமங்கள் போர்தனில் வெற்றியண்மை
நிசமுடனவரவர்க்கு நீணிலந்தனிலளிக்கும்
குசனில மகனாஞ் செவ்வாய் குறைகழல் போற்றி!போற்றி!
 தமிழ் மொழியில் செவ்வாய் பகவான் பாடலைப் பாடி, செவ்வாய் பகவானின் அருளைப் பெருவோம்

சந்திர பகவான்

அலை கடல்தனி நின்று மன்று வந்துதித்த போது
கலை வளர்திங்களாகிக் கடவுளரெவரு மேத்துஞ்
சிலை நுதல்மையாள் பங்கன் செஞ்சடை பிறையாய் மேறு
மலை வலமாக வந்த மதியமே போற்றி!
  தமிழ் மொழியில் சந்திர பகவானின் பாடலை பாடி சந்திர பகவானின் அருளைப் பெருவோம்.

வெள்ளி, 17 மே, 2019

சூரியபகவான்

காசினி யிருளை நீக்கும் கதிரொளியாகி யெங்கும்
பூசனண யுலகோர் போற்றப் புசிப் பொடு சுகத்தை நல்கும்
வாசியே ழுடய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகாயெனனரட்சிப்பாய் செங்கதிரவனெ போற்றி.
   தமிழ் மொழியில் சூரிய பகவானன வணங்கி சூரிய பகவானின் அருளைப் பெருங்கள்.
     

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...